கோட்டைவிட்ட கே.எல்.ராகுல்; நிதானமாக சதமடித்த கேப்டன் கில்..46 ஆண்டுகால சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் சுப்மன் கில் சதம் விளாசினார்.
கே.எல்.ராகுல் 90 ஓட்டங்கள்
ஓல்ட் டிராஃப்போர்டில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை ஆடி வருகிறது.
Making. Things. Happen.
— England Cricket (@englandcricket) July 27, 2025
Ben Stokes gets one to jag back, stay low and KL Rahul is gone for 90.
🇮🇳 1️⃣8️⃣8️⃣-3️⃣ pic.twitter.com/PbPw1CEFn7
அணியின் ஸ்கோர் 188 ஆக உயர்ந்தபோது கே.எல்.ராகுல் 90 (230) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவர் Lbw ஆகி வெளியேற, வாஷிங்டன் சுந்தர் களத்தில் இறங்கினார்.
சுப்மன் கில் சாதனை
மறுபுறம் அணித்தலைவர் சுப்மன் கில் (Shubman Gill) நிதானமாக ஆடி சதத்தை எட்டினார். இது அவரது 9வது டெஸ்ட் சதமாகும்.
இதன்மூலம் அயல்நாட்டு மண்ணில் ஒரே தொடரில் 4 சதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் ஆகியோர் சொந்த மண்ணில் இந்த சாதனையை செய்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |