அகமதாபாத் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்: பிசிசிஐ மருத்துவ குழு தொடர் கண்காணிப்பு
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று அகமதாபாத் செல்லவுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் தொடக்க ஆட்டத்திற்கு 2 நாட்கள் முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை சற்று முன்னேறியுள்ளது, அத்துடன் அவர் மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
Shubman Gill will be travelling to Ahmedabad today.
— Johns. (@CricCrazyJohns) October 11, 2023
He will continue his recovery under the BCCI medical team. pic.twitter.com/jASh2rB1ku
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 14ம் திகதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில் இன்று அகமதாபாத் செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அங்கு அவர் பிசிசிஐ மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசிய தகவலில், சுப்மன் கில் குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் விரைவில் இந்திய அணிக்காக பேட்டிங்கில் கலக்குவார் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, சுப்மன் கில் அக்டோபர் 22ம் திகதி தர்மசாலாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |