820 ஓட்டங்கள் குவித்த அணி! 180 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..305 ரன் விளாசிய வீரர்
கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடரில் சர்ரே 820 ஓட்டங்கள் குவித்து புதிய வரலாறு படைத்தது.
டொமினிக் சிப்லே, சாம் கர்ரன் ருத்ர தாண்டவம்
லண்டன் ஓவல் மைதானத்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் (County Division One 2025) போட்டியில், சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் விளையாடி வருகின்றன.
Sibley scoop alert 🚨
— Surrey Cricket (@surreycricket) June 29, 2025
Dom Sibley went from 100 to 150 in just 40 balls then pulled out the scoop to celebrate 🍨
🤎 | #SurreyCricket pic.twitter.com/4mTYh12ysJ
நாணய சுழற்சியில் வென்ற டர்ஹாம் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, சர்ரே அணி முதலில் துடுப்பாடியது.
அணித்தலைவர் ரோர்ரி பர்ன்ஸ் 55 (74) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, ரியான் படேல் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் கைகோர்த்த டொமினிக் சிப்லே மற்றும் சாம் கர்ரன் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது.
டேன் லாரன்ஸ் சரவெடி ஆட்டம்
அதிரடி சதம் விளாசிய சாம் கர்ரன் (Sam Curran) 124 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதான சதம் விளாசிய சிப்லே, டேன் லாரன்ஸ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
டேன் லாரன்ஸ் (Dan Lawrence) டர்ஹாம் பந்துவீச்சை சூறையாடி 149 பந்துகளில் 178 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும்.
சிப்லே முச்சதம்
ரன் வேட்டை நடத்திய டாமினிக் சிப்லே (Dominic Sibley), இரட்டை சதத்தை கடந்து முச்சதம் விளாசினார்.
அவர் 2 சிக்ஸர், 29 பவுண்டரிகளுடன் 305 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
வில் ஜேக்ஸ் தனது பங்குக்கு 94 பந்துகளில் 119 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் 820 ஆக உயர, அணித்தலைவர் பர்ன்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
சர்ரே (Surrey) அணி 820 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் 180 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.
1899ஆம் ஆண்டில் சோமர்செட் அணிக்கு எதிராக சர்ரே அணி 811 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
A remarkable feat at the Kia Oval! 🪶
— Surrey Cricket (@surreycricket) June 30, 2025
8⃣2⃣0⃣/9⃣ is our highest team total in a first-class fixture. 📈
The previous best was 811 against Somerset, at the same ground, 126 years ago.
🤎 | #SurreyCricket https://t.co/cWPApuVvTg pic.twitter.com/FeIHwySomI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |