எரிவாயு கசிந்து வெடித்துச் சிதறிய வீடுகள்: இறப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்வு
சிசிலியில் எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட வெடி விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயரந்துள்ளது.
இத்தாலியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிசிலிய நகரமான ரவனுசாவில், ஒரு வீட்டில் எரிவாயு கசிந்து பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
அதில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி காணவில்லை என்று கூறப்பட்டது.
பின்னர் சில மணிநேரங்களில் மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டது.
Photo: REUTERS/Guglielmo Mangiapane
மீட்புப்பணி இரவு முழுவதும் நடைபெற்ற நிலையில், இன்று மேலும் 4 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். இதனால் உறுதிப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கையை 7-ஆக உயர்ந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் (திங்களன்று) தெரிவித்தனர்.
மேலும், இரண்டு பேர் இன்னும் கான்கிரீட் மற்றும் உலோகக் குவியலில் புதைக்கப்பட்டுள்ளனர் என்று நம்பப்படும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு முகமை தன்னார்வத் தொண்டர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிப்பின் சத்தம் கிலோமீட்டர் (மைல்) தொலைவில் உணரப்பட்டது, இந்த விபத்தில் 4 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
Photo: REUTERS/Guglielmo Mangiapane
Photo: REUTERS/Guglielmo Mangiapane