கையில் தேசிய கொடியுடன் சித்தராமையாவின் ஷூவை கழற்றிய உதவியாளர்.., சர்ச்சையாகும் வீடியோ
கையில் தேசிய கொடியை வைத்துக்கொண்டே சித்தராமையாவின் ஷூவை கழற்றிய உதவியாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை வீடியோ
தேச தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 2 -ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தி நாளில் இந்தியா முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார்.
அப்போது, பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் காந்திஜிக்கு மரியாதை செலுத்துவதற்காக அவர் வந்திருந்தார். பின்னர், தனது காலணிகளை கழற்றுவதற்கு ஆயத்தமானார்.
அந்த நேரத்தில், கையில் தேசிய கொடி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் சித்தராமையாவின் காலணிகளை கழற்றி விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, காந்திஜிக்கு அவமரியாதை செய்து விட்டார் என்றும் கூறி எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |