கட்சி பெயரை சொல்லி ரூ.5 கோடி வசூலிச்சிருக்காங்க.., நிர்வாகிகள் விலகிய நிலையில் சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சீமான் பேசியது
சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் விலகினார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் கட்சியில் இருந்து விலகினார். இவர்கள் கட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சியில் இருக்கும் வரையில் இருப்பார்கள்.
அதிருப்தி வந்தால் திருப்தி இருக்கிற இடத்தில் போய் சேர்ந்து கொள்வார்கள். கட்சியின் பெயரை சொல்லி ரூ.5 கோடி வசூல் செய்திருக்கிறார்கள். என்னுடைய முகத்திற்காக எல்லாரும் வழக்கு கொடுக்காமல் உள்ளார்கள்.
அதை வெளியில் சொன்னால் எனக்கு தகுதி இருக்குமா? வளரும் கட்சியில் பல பிரச்சனைகள் வர தான் செய்யும். அதை பெரிதாக பேசாதீர்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |