கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா.., ரூ.50 லட்சம் பரிசு அறிவித்த முதலமைச்சர்
43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவிற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டம்
இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணா. இவர், அண்மையில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில், இத்தாலிய ஜோடியான சைமன் பொலேல்லி - ஆண்ட்ரியா வாவசோரியை வீழ்த்தி ரோஹன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி பட்டம் வென்றனர்.
இதனால், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் ரோஹன் போபண்ணா பெற்றார்.
ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு
இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா ரோஹன் போபண்ணாவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ಆಸ್ಟ್ರೇಲಿಯಾ ಓಪನ್ ಟೆನಿಸ್ ಟೂರ್ನಿಯ ಪುರುಷರ ಡಬಲ್ಸ್ ವಿಭಾಗದಲ್ಲಿ ಪ್ರಶಸ್ತಿ ಗೆದ್ದು ಐತಿಹಾಸಿಕ ಸಾಧನೆ ಮಾಡಿದ @rohanbopanna ಅವರನ್ನು ಭೇಟಿಯಾಗಿ ಅಭಿನಂದಿಸಿ, 50 ಲಕ್ಷ ರೂ.ಗಳ ಬಹುಮಾನ ಘೋಷಿಸಿದೆ.
— Siddaramaiah (@siddaramaiah) February 13, 2024
ಸಚಿವರಾದ @PriyankKharge, ಶಿವರಾಜ ತಂಗಡಗಿ, ಮುಖ್ಯಮಂತ್ರಿಯವರ ರಾಜಕೀಯ ಕಾರ್ಯದರ್ಶಿ ಗೋವಿಂದರಾಜು ಹಾಗೂ ರೋಹನ್ ಬೋಪಣ್ಣ ಅವರ… pic.twitter.com/kRA0ftRoq4
மேலும் அவர், தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற ரோஹன் போபண்ணாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும், அவரை கௌரவிக்கும் விதமாக ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |