Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக தலை முடி முதல் கால் நகம் வரை ஒவ்வொன்றையும் அழகுப்படுத்திக்கொள்வது வழக்கம்.
ஒரு சில பெண்கள் தங்களது அழகை வீட்டில் இருந்தப்படி இயற்கையான முறையில் மேம்படுத்துவார்கள் ஆனால் ஒரு சிலர் அவர்களது அழகை சிகை அலங்கார நிலையங்களுக்கு சென்று மேம்படுத்துவார்கள்.
அதில் ஒன்று தான் முடியை வண்ண நிறத்தில் மாற்றுவதாகும். தற்போதை இளைய சமூகத்தினருக்கு தங்களது முடியை ஒவ்வொரு நிறத்தில் மாற்றிக்கொள்வார்கள்.
அதுப்போலவே வயதானவர்களும் தங்களது நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு கருப்பு நிற சாயத்தை பயன்படுத்துவது வழக்கம்.
இதை பயன்படுத்துவதால் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அது உடலிற்கு பல தீங்கு விளைவிக்கும். அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
முடிக்கு பூசும் சாயத்தில் இருக்கும் இரசாயனங்கள்
பெரும்பாலான சாயங்களில் பல்வேறு இரசாயனங்கள் உள்ளன.
அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் p-Phenylenediamine (PPD) ஆகியவை முடி சாயத்தில் காணப்படும் மிகவும் பொதுவான இரசாயனங்கள் ஆகும்.
ஏற்படும் ஆபத்து?
-
முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் அரிப்பு, வெடிப்புகள் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.
- முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முடியின் அமைப்பு மாற்றப்பட்டு, எளிதில் உடையக்கூடியதாக மாறுகிறது.
- முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முடியில் அதிகளவில் சேதம் ஏற்படும்.
- முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும்.
- நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது முடியின் நிறத்தை மாற்றுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
- முடி சாயம் பொடுகுக்கு காரணமாக இருக்க முடியாது, ஆனால் அது உங்கள் உச்சந்தலையில் உள்ள இயற்கையான கொழுப்பு அடுக்குகளை அகற்றி, பொடுகு உண்டாக்கும் பூஞ்சையை பிடிக்க அனுமதிக்கும்.
- சில முடி சாயங்களில் கனரக இரசாயனங்கள் உள்ளன. அவை புற்றுநோய் ஏற்பட வழிவகுகின்றது.
- முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் முடி வேர்களை பலவீனப்படுத்தப்படும். இது முடி உதிர்வை அதிகரிக்கும்.
இவ்வாறு பல தீமைகள் எற்படுதன் காரணமாக இயற்கையான முறையை பயன்படுத்துவது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எனவே எந்தவொரு இரசாயனமும் சேர்க்கப்படாத அதாவது, தாவரவியல் சாறுகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற இயற்கை கூறுகளை தயாரிக்கப்படும் இயற்கை நிற சாயத்தை பயன்படுத்துவது நல்லதாகும்.