தர்பூசணி சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்து உங்களுக்கு தான் - உஷார்!
கோடை காலம் வந்துவிட்டாலே அனல் காற்றும், வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்து வரும். அதில் இருந்து விடுப்பட்டு இருப்பதற்காக பலரும் நாடுவது தர்பூசணியை தான்.
இப்போது தர்பூசணி கோடை வெப்பத்தை வெல்ல மலிவான விலையில் சந்தைகளில் கிடைத்து வருகிறது. கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க மக்கள் தர்பூசணியை அதிகம் சாப்பிடுவார்கள்.
இதில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதே நேரத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
குறிப்பாக கூற வேண்டுமென்றால், தர்பூசணி ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். ஆனால் தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதும் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அது உங்களுக்கு தெரியவில்லை என்றால் உடனே நீங்கள் இந்த பதிவை விரிவாக படிக்கவும்.
தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
நீரிழிவு நோயாளிகள் அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் அதிக அளவில் சாப்பிட்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
தர்பூசணியில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். நீங்கள் அதிக பொட்டாசியத்தை உட்கொண்டால் அது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தர்பூசணியில் அதிக அளவு உணவு நார்ச்சத்து உள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், அதை அதிகமாக உட்கொண்டால், அதிகப்படியான நீரேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை அதிகரித்து சோடியத்தின் அளவைக் குறைக்கும். எனவே வீக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |