லொறியுடன் மோதி வெடித்துச் சிதறிய எரிபொருள் டேங்கர்... 90 பேர் பலி! பதைபதைக்க வைக்கும் காட்சி
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி கிட்டதட்ட 90 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைநகர் Freetown-ல் எரிபொருள் டேங்கர் லொறி மற்றொரு லொறி மீது மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து டேங்கரிலிருந்து கொட்டிய எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவி பற்றி எரிந்துள்ளது.
இதில், அப்பகுதியிலிருந்து வாகனங்கள், கடைகள் மற்றும் மக்கள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், பெட்ரோல் நிலையமும் வெடித்ததாக கூறப்படுகிறது.
விபத்தை தொடர்ந்து சுமார் 91 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருதவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
#FreeTown #SierraLeone
— ? Sarwar ? (@ferozwala) November 6, 2021
Victims included people who had flocked to collect #Fuel leaking from the ruptured vehicle, Yvonne Aki-Sawyerr, mayor of the port city, said in a post on #Facebook.#BreakingNews pic.twitter.com/PjFq4iVypM
Freetown நகரில் வெடி விபத்தில் சிக்கி பலர் உயரிழந்துள்ள சம்பவத்தால் தான் மிகவும் கலக்கமைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அரசாங்கம் அனைத்தையும் மேற்கொள்ளும் என நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio தெரிவித்துள்ளார்.