வருகிறது புதிய தடுப்பூசி! உற்பத்தியை தொடங்கிய சீரம் இன்ஸ்டிடியூட்
சீரம் நிறுவனம் (SII) கோவோவாக்ஸ் (Covovax) எனும் புதிய கோவிட்-19 தடுப்பூசியின் உற்பத்தியை புனேவில் தொடங்கியது.
Covovax எனும் கோவிட்-19 தடுப்பூசியை அமெரிக்க நிறுவனமான Novavax தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் சிறந்த பலனளிக்கும் என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நோவாவாக்ஸுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, செப்டம்பர் மாதத்திற்குள் கோவோவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கான முதல் தொகுதியை உற்பத்தி செய்யும் பணி இன்று தொடங்கியதாக சிரம் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வாமாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளது.
கோவோவாக்ஸ் தயாரிப்பைத் தொடங்குவதன் மூலம் SII ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று அந்த டீவீட்டில் தெரிவித்துள்ளது.
A new milestone has been reached; this week we began our first batch of Covovax (a COVID-19 vaccine developed by @Novavax) at our facility, here in Pune. pic.twitter.com/FqoVTUa1nO
— SerumInstituteIndia (@SerumInstIndia) June 25, 2021
இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடந்த கோவோவாக்ஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவில், நோவாவாக்ஸ் இன்க் அதன் தடுப்பூசி வேட்பாளர் 'NVX-CoV2373' மிதமான மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிராக 100 சதவீத பாதுகாப்பை வெளிப்படுத்தியதாகவும், ஒட்டுமொத்தமாக 90.4 சதவீத செயல்திறனைக் காட்டியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா அடுத்த மாதம் நோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக பூனேவை சேர்ந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் தற்போது Covaxin, Covishield மற்றும் Sputnik-V ஆகிய மூன்று தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, நான்காவதாக Covovax அங்கீகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.