பாகிஸ்தானை விட தேசிய கடமைதான் முக்கியம்! பிரபல ஜிம்பாப்பே வீரர்
தன்னைப் பற்றி பரவும் தகவல்களில் உண்மை இல்லை என ஜிம்பாப்பே கிரிக்கெட் அணி வீரர் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார்.
சிக்கந்தர் ரஸா
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக ஜிம்பாப்பேயின் சிக்கந்தர் ரஸா விளையாடி வந்தார்.
ஆனால், இந்தியாவுடனான சண்டை காரணமாக PSL டி20 தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், அவர் மீண்டும் தொடருக்கு திரும்ப மாட்டார் என்ற தகவல் பரவியது. அதே சமயம் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் அணியில் ரஸா இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் PSL தொடரில் விளையாடுவேன் என்றும், ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் டெஸ்ட் போட்டி முதன்மையானது என்றும் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) தெளிவுப்படுத்தியுள்ளார்.
நான் அதை மதித்து நிறைவேற்றுவேன்
அவர் தனது பதிவில், "அன்பான அனைவருக்கும், நான் PSL மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கான எனது இருப்பு குறித்து டேக் செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளேன்.
தேசிய கடமைதான் எனக்கு முதன்மையானது மற்றும் தேர்வு செய்யப்பட்டவுடன் நான் அதை மதித்து நிறைவேற்றுவேன்.
டெஸ்ட் போட்டியை நான் தவறவிட்டதாக வெளியான அனைத்து செய்திகளும் உண்மையல்ல. PSL குறித்து, நான் பாகிஸ்தானுக்கு வர மாட்டேன் என்ற அனைத்து செய்திகளும் உண்மையல்ல" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |