46 பந்தில் 66 ரன் விளாசியும் வீண்! கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ராயல்ஸ் த்ரில் வெற்றி
SA20 தொடர் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.
எய்டன் மார்க்ரம் அரைசதம்
போலண்ட் பார்க்கில் நேற்று நடந்த SA20 போட்டியில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
Sportzpic/MLC
முதலில் ஆடிய டர்பன்ஸ் அணி 186 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் 46 பந்துகளில் 66 ஓட்டங்களும், லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 32 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியில் டேன் லாரன்ஸ், ரூபின் ஹெர்மான் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்தக் கூட்டணியின் மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் விளாசினர்.
சிக்கந்தர் ரஸா மிரட்டல்
டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 41 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
எனினும், அடுத்து வந்த சிக்கந்தர் ரஸாவும் அதிரடியில் மிரட்ட, கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ஓட்டங்களே தேவைப்பட்டது.
வீசே வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) சிக்ஸர் ஆக பறக்கவிட, பார்ல் ராயல்ஸ் 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற ரூபின் ஹெர்மான் (Rubin Hermann) 45 பந்துகளில் 65 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்), ரஸா 13 பந்துகளில் 27 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.
Sportzpic/MLC
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |