ஜிம்பாப்வே அணியில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த சிக்கந்தர் ராசா
ஐசிசி ஒருநாள் T20 க்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிக்கந்தர் ராசா முதலிடம்
இதில் ஒருநாள் போட்டிக்கான ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, 302 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை எதிரான இரு ஒருநாள் போட்டிகளிலும், அரைசதம் அடித்தன் மூலம் அவரது புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இதன் மூலம், ஒருநாள் போட்டிக்கான ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஒரே ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஆப்கானிஸ்தான் வீரர்கள் அஸ்மதுல்லா உமர்சாய் 266 புள்ளிகளுடனும், முகமது நபி 292 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
T20 ஆல் ரவுண்டர் தர வரிசையில், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜா முதலிடம் பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |