கனடாவில் 24 வயது சீக்கிய இளைஞர் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளியினர் மீது அதிகரிக்கும் தாக்குதல்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது சீக்கிய இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி உயிரிழப்பு
கனடாவில் 24 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டிசம்பர் 3ம் திகதி இரவு காவல்துறை அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்மண்டன் பொலிஸார், பாதிக்கப்பட்டவருக்கு போதுமான முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.
அவசர மருத்துவ சேவை குழு வந்து பரிசோதித்த போது, பாதிக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
Sanraj Singh-சன்ராஜ் சிங்(Twitter)
இதையடுத்து எட்மண்டன் பகுதியில் காரில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் சன்ராஜ் சிங் என்று எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீக்கியர் சன்ராஜ் சிங்கின் உடற்கூறு ஆய்வு முடிவில், கொலை தாக்குதலே அவரது இறப்பிற்கு காரணம் என செய்தி அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கிடமான வாகனம் அப்பகுதியிலிருந்து வெளியேறுவதை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் அதன் புகைப்படங்கள் கொலை விசாரணையாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் டிசம்பர் 3 ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் உள்ளதா என்று குடியிருப்பாளர்கள் தங்கள் சிசிடிவி கேமராக்கள் அல்லது டேஷ் கேம் காட்சிகளைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
#Edmonton Homicide investigators are releasing images of a vehicle of interest that was seen leaving the area following the homicide of Sanraj Singh - Homicide Canada
— Homicide Canada (@homicide_canada) December 9, 2022
https://t.co/g6CConj7My pic.twitter.com/RUsHlJBokx
சமீபத்தில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய சீக்கிய பெண்மணி ஹர்பீர்த் கவுர் கத்தியால் பல முறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த டிசம்பர் 3ம் திகதி 21 வயதுடைய பவன்ப்ரீத் கவுர் என்ற கனேடிய சீக்கிய பெண், மிசிசாகா எரிவாயு நிலையத்தின் வாசலில் சுட்டு கொல்லப்பட்டார்.
அதற்கு முந்தைய மாதம் 18 வயதுடைய இளம் பெண் மெஹக்ப்ரீத் சேத்தி, சர்ரே பகுதியில் உள்ள பள்ளி பார்க்கிங் வளாகத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறிப்பிட்ட சமூக பிரிவினர் மீது அடுத்த அடுத்து நடைபெறும் இந்த தாக்குதல் சமூக வன்முறையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.