மனைவியின் மரணத்துக்குப் பின் கணவன் வெளியிட்டுள்ள புகைப்படம்: இந்த புகைப்படத்தில் ஏதாவது அசாதாரணமாக தோன்றுகிறதா?
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் வாழும் ஒருவர் தன் மனைவியின் புகைப்படங்கள் மற்றும் தானும் தன் மனைவியும் சேர்ந்து அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவரது பெயர் Tapas Sandilya (65).
அந்த புகைப்படங்களில் ஏதாவது அசாதாரணமாக தோன்றுகிறதா?
Credit: Jam Press/Newslions
உண்மை என்னவென்றால், அந்த புகைப்படங்களில் இருப்பது சாண்டில்யாவின் மனைவி இந்திராணி அல்ல!
ஆம், இந்திராணி 2021ஆம் ஆண்டு, மே மாதம் கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தின்போது உயிரிழந்துவிட்டார்.
மனைவியின் ஆசை
இந்திராணி, தான் தன் கணவருக்கு முன் மரணமடைந்துவிட்டால், தனக்கு ஒரு சிலை செய்யவேண்டும் என்று சாண்டில்யாவிடம் கூறுவாராம். அதேபோல, மனைவி இறந்ததும், அப்படியே தத்ரூபமாக தன் மனைவியைப் போலவே காணப்படும் ஒரு சிலையை செய்து தன் வீட்டில் வைத்திருக்கிறார் சாண்டில்யா.
Credit: Jam Press/Newslions
இந்திராணிக்கு பிடித்த நகைகள் மற்றும் புடவையுடன் காணப்படும் அந்த சிலையைப் பார்த்தால், அதை சிலை என்றே கூறமுடியவில்லை.
சாண்டில்யா அந்த சிலையுடன் இருக்கும் புகைப்படங்கள்தான் இங்கு வெளியாகியுள்ளன. Subimal Das எனும் சிற்பி வடிவமைத்த, அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் அந்த சிலையை வடிவமைக்க ஆறு மாதங்கள் பிடித்ததாம்!
Credit: Jam Press Vid/Newslions