SIM Card வாங்குபவர்கள் இந்த தவறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி : இந்திய அரசு
சிம் கார்டு மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் தொலைத் தொடர்பு மசோதாவை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தொலைத் தொடர்பு மசோதா
தற்போதைய காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கும், குற்ற வாய்ப்புகள் உட்பட பல சிக்கல்களை தவிர்க்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு மசோதாவை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
கடந்த 20 -ம் திகதி இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, 21 -ம் திகதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்பு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
SIM card விதிமுறைகள்
தொலைத் தொடர்பு மசோதாவில் சிம்கார்டு மோசடிகளை தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு வாங்க விரும்புவோருக்கான கேஒய்சி (KYC) விதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை கொடுத்து SIM card வாங்கினால் தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்லாது, அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கும், சிம் பாக்ஸ் கொண்டு முறைகேடான முறையில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துபவர்களுக்கும் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |