இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்! திடீரென போட்டியிலிருந்து விலகிய வீராங்கனை- ஒலிம்பிக்கில் பரபரப்பு
ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்கு தெரிவான பின்னரும், மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார் Simone Biles.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு தெரிவானாலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான Simone Biles.
இவர் பெண்களுக்கான ஆல்-ரவுண்ட் பிரிவில் சக வீராங்கனைகள் மூன்று பேருடன் தகுதிச்சுற்றில் கலந்து கொண்டார்.
இந்த சுற்றில் தனிப்பட்ட முறையில் முதலிடம் பிடித்தாலும், மன அழுத்தம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
மேலும் இவரது முடிவை அமெரிக்க ஜிம்னாஸ்டின் அசோசியேஷன் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.