கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க வேண்டுமா? இவற்றை மறக்கமால் செய்தாலே போதும்
நம்முடைய உடலில் தினமும் நச்சுக்கள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை வெளியேற்ற நம்முடைய உடல் போராடுகிறது.
நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டதாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, அதிக மசாலா, கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன.
இவற்றை உரியமுறையில் நீக்குவது சிறந்நது. இல்லாவிடின் உடல் பருமன் போன்ற முக்கிய நோய்களை ஏற்படுத்திவிடுகின்றது.
அந்தவகையில் கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
காலை எழுந்ததும் சாப்பிட வேண்டியவை
- காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாறுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
- காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இது இது குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, குடலின் இயக்கத்தை மேம்படுத்தச் செய்கிறது.
மதிய உணவு
- ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள ஃபிரஷ்ஷான காய்கறிகள், தயிர், சப்பாத்தி மற்றும் புரதச்சத்து நிறைந்த பருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கார்போ நிறைந்த காய்கறிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மாலை நேரம்
- மாலை நேரங்களில், ஃபிரஷ்ஷான பழங்கள் ஏதாவது ஒன்றுடன் ஒரு கப் க்ரீன் டீ எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு நாளைக்கு கேரட், வெள்ளரி சாலட், ஸ்மூத்தி, சிறிய துண்டு அளவு டார்க் சாக்லெட், க்ரீக் யோகர்ட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு நேரம்
- ஒரு பௌல் வெஜிடபிள் அல்லது ஃப்ரூட் சாலட், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
- மீன் உணவுகள், சிக்கன் மார்பு பகுதி, காய்கறிகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இரவில் அதிக கொழுப்பு நிறைந்த இறைச்சியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குறிப்பு
உணவின் வழியாக டீடாக்ஸ் செய்கிறோம் என்று சாப்பிடுவதோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. அதற்கு ஏற்றபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.