ரூ.1 லட்சத்தில் அறிமுகமான Simple Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டர்., சிங்கிள் சார்ஜில் 151 கிமீ Range
Simple Energy நிறுவனம் அதன் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தைக்கு ரூ. 1 லட்சத்திற்குள் அறிமுகப்படுத்தியது.
புதிய Simple Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.99,999 விலையில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இருப்பினும், இந்த விலை குறிப்பாக பெங்களூரில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு என்று Simple Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 2024-ல் புதிய விலை வெளியிடப்படும், அது தற்போதைய விலையை விட சற்று அதிகமாக இருக்கும். தற்போது இந்த ஸ்கூட்டரின் ஒன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. Simple Energy நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முன்பதிவு செய்யலாம்.
சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டர்
Simple Dot One ஒற்றை வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிலையான பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 151 கிமீ (Range) தூரம் செல்லும்.
இது Namma Red, Brazen Black, Azure Blue, Grace White, BrazenX மற்றும் LightX என 6 வண்ணங்களில் கிடைக்கிறது. Dot One 750W சார்ஜருடன் வருகிறது. பெங்களூருக்குப் பிறகு, மற்ற நகரங்களிலும் அதன் விநியோகம் படிப்படியாக தொடங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
செயல்திறன் மற்றும் அம்சங்கள்
Dot One செயல்திறனைப் பற்றி பேசுகையில், இது 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் இது 3.7kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இதில் 8.5kW மின்சார மோட்டார் உள்ளது, இது 72Nm torqueயை உருவாக்குகிறது. இதில் Tubeless Tyres பயன்படுத்தப்பட்டுள்ளன.
Simple Dot Oneல் 12-inch Wheels, 7-inch TFT touchscreen instrument console, CBS, இரு சக்கரங்களிலும் Disc Brakes மற்றும் 35-Litre Under Seet Storage உள்ளது, இதில் உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்திருக்க முடியும். இதனுடன் App connectivity கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Simple Dot One Electric Scooter, Simple Dot One Launch, Simple Dot One price, Bengaluru, Simple Energy