சிறுநீரக கற்களால் அவஸ்தைப்படுறீங்களா? அதனை குறைக்க இதோ சில வீட்டு வைத்தியம்!
பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் சிறுநீர கற்களால் அவதிப்பட்டு வருகின்றார்கள். இதற்கு நமது வாழ்க்கை முறையே காரணம்.
சிறுநீரகத்தில் சேரக்கூடிய அதிகப்படியான கனிம சத்துக்களும், உப்பும் கற்களாக மாறிவிடும்.
இந்த கற்கள் சிறுநீரகத்தின் உள்ளே இருக்கும் போது எந்த ஒரு அறிகுறியையும் வெளிபடுத்தாது.
ஆனால், இது சிறுநீரகப் பாதையை நோக்கி நகரும் போது அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து அதை இரண்டு லிட்டர் நீரில் கலந்து தேவையெனில் தேன் சேர்க்கலாம். இதை நாள் முழுவதும் குடித்து கொண்டே இருக்க வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ எடுத்து ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். இது நன்றாக கொதிக்கும் வரை வைத்திருந்து பிறகு தேனை சேர்த்து குளிர்வித்து பிறகு குடிக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 கப் வரை குடிக்கலாம். க்ரீன் டீ சிறுநீரக கற்களுக்கான தீர்வுகளில் சிறந்ததாக சொல்லப்படுகிறது.
-
இனிப்பு சேர்க்காத ஒரு டம்ளர் க்ரான் பெர்ரி (குருதி நெல்லி சாறு) குடிக்க வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் குடிகலாம்.
-
நன்றாக பழுத்த தக்காளி பழத்தை ப்ளெண்டரில் மசித்து மிளகுத்தூள் சிட்டிகை உப்பு தேவையெனில் சேர்த்து ஒரு டம்ளர் குடிக்கலாம். தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்தால் போதும்.
-
எலுமிச்சை நடூத்தர அளவிலான பாதியை எடுத்து அதை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து விடவும். தேவையெனில் சிறிது தேன் சேர்க்கவும். தினமும் இரண்டு முறை வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்கு முன்பும் இதை குடிக்கலாம்.
-
அரை கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து நசுக்கி எடுக்கவும். இதனுடன் தேன் கலந்து ஏதேனும் பழச்சாறு அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். இதை தினமும் ஒரு முறை குடித்து வந்தால் போதுமானது.
-
எப்சம் உப்பு - 1 கப் குளிக்கும் நீரில் ஒரு கப் எப்சம் உப்பு சேர்க்கவும். இதை 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்ய வேண்டும்.
-
5 அல்லது 6 பல் பூண்டு எடுத்து 1 கப் தண்ணீர் விட்டு அதில் கலந்து தேன் சேர்த்து கலக்கவும். பூண்டு நன்றாக வெந்ததும் அதை கலக்கி குடிக்க வேண்டும். தினமும் 1 அல்லது 2 முறை குடிக்க வேண்டும்.
-
கோதுமை புல் - 1 கப், தேன் தேவைக்கு. கோதுமை புல் சாறு கடைகளில் கிடைக்கும். இதனுடன் தேன் சேர்த்து தினம் ஒரு கப் வீதம் குடிக்க வேண்டும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.