டோக்கியோ ஒலிம்பிக்: பி.வி.சிந்து அசத்தல் வெற்றி! அரையிறுதிக்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகேனா யாமாகுச்சி மோதினார்.
சுமார் 56 நிமிடங்கள் நடந்த காலிறுதி போட்டியில் 21-13, 22-20 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து, அகேனா யாமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்னும் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றிப்பெற்றால் பி.வி.சிந்துவிற்கு ஒலிம்பிக் பதக்கம் உறுதியாகும்.
PHEW! ?@Pvsindhu1 making Indian hearts race faster than @usainbolt at the #Olympics! ??#Tokyo2020 | #BestOfTokyo | #StrongerTogether | #UnitedByEmotion pic.twitter.com/K1U9sfhDfC
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 30, 2021