நடுவானில் குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானம்! பயணிகள் மூளை, முதுகு காயங்களுடன் அவதி
சிங்கப்பூர் விமான நிறுவன விமானத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வுகளால் காரணமாக பயணிகள் கடுமையான மூளை, முதுகு தண்டுவடத்தின் காயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் விமான நிறுவன விமானம், மியான்மார் வான்பரப்பில் கடுமையான வான்வெளி அதிர்ச்சியை சந்தித்த பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று பாங்காக்கில் அவசர தளம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பலர் காயமடைந்தனர். அத்துடன், 73 வயதான பிரித்தானிய நபர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
A Singapore Airlines Boeing 777-312(ER) aircraft (9V-SWM) operating flight SQ321 from London (LHR) to Singapore (SIN) hit an air pocket and made an emergency landing at Suvarnabhumi Airport, Bangkok (BKK) at 3:34 pm today. Initial reports indicate 20 people were injured.… pic.twitter.com/G4TH7Vs2xX
— FL360aero (@fl360aero) May 21, 2024
தீவிர விளைவுகள்
பாங்காக்கின் சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆதினுன் கிட்டிரதனபைபூல்(Dr. Adinun Kittiratanapaibool), SQ321 விமானத்தின் 40 பேர் வியாழக்கிழமை வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த காயமடைந்த பயணிகளில், 22 பேர் முதுகு தண்டுவடத்தின் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது வான்வெளி அதிர்ச்சியின் காரணமாக ஏற்படும் மிகவும் கவலைக்கிடமான விளைவு என்று தெரிவித்தார்.
மேலும், ஆறு பயணிகளுக்கு தலை மற்றும் மண்டை ஓடு காயங்கள் ஏற்பட்டன. எல்லா காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல, சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.
Londra'dan Singapur'a giden bir Singapur Havayolları Boeing 777-300ER uçağının şiddetli türbülansa girmesi sonucu bir kişi öldü, onlarca kişi yaralandı. pic.twitter.com/epGkebTDyv
— Milena (@josephineVV5) May 22, 2024
கடுமையான வான்வெளி அதிர்ச்சி
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களை கொண்ட Boeing 777-300ER விமானம் 3 நிமிடத்தில் 1,800 மீட்டர் கீழே இறங்கியதாக விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த 104 பேர் எலும்பு முறிவுகள் மற்றும் தசை வலிகள் உட்பட பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டனர். எல்லா காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |