பொய் பேசியதற்காக 9 வயது மகனுக்கு தண்டனை: சிங்கப்பூர் தந்தைக்கு 6 மாத சிறை
Singapore dad jailed for making 9-year-old son strip naked: 9 வயது மகன் பொய் சொன்னான் என்பதற்காக, அவனை ஆடையின்றி குடியிருப்பில் நடக்க வைத்த தந்தைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சுமார் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
9 வயது மகனுக்கு தந்தை வழங்கிய தண்டனை
பொய் பேசியதாக கூறி 9 வயது மகனை ஆடையின்றி அடுக்குமாடி குடியிருப்பில் நடக்க சொல்லி தந்தை கொடுத்த தண்டனை, இப்போது அவரையே சிறைக்கு அனுப்பி இருக்கிறது. 9 வயது மகனை ஆடையின்றி அடுக்குமாடி குடியிருப்பில் நடக்க வைத்து அவமானப்படுத்திய 40 வயது தந்தைக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் சுமார் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் 8-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த போது, தன்னுடைய மகன் பொய் பேசியதற்காக தந்தை கடும் கோபம் அடைந்துள்ளார்.
மேலும் இதற்கான தண்டனையாக சிறுவனின் ஆடைகளை முழுவதும் கழற்றி விட்டு, லிப்ட் மூலமாக தரை தளத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருமாறு தண்டனை வழங்கியுள்ளார்.
சகோதரனின் இந்த அவல நிலையை செல்போனில் வீடியோ எடுக்குமாறு தனது 7 வயது மகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.
ஆடை இல்லாமல் நடைபாதையில் ஓடிய சிறுவன் லிப்ட்டில் ஏறியபோது, குடியிருப்பைச் சேர்ந்த இருவர் உள்ளே வந்து சிறுவனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பிறகே சிறுவன் மீண்டும் 8-வது தளத்திற்கு திரும்பியுள்ளான்.
கடந்த 2025 செப்டம்பரில் நடந்த இந்த சம்பவம் நடந்த நிலையில், குழந்தையை துன்புறுத்திய குற்றத்தை அவர் நவம்பர் 26-ஆம் தேதி ஒப்புக்கொண்ட நிலையில், விமான நிலையத்தில் வைத்து மகளை தாக்கியது போன்ற மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளையும் சேர்த்து விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தற்போது 6 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருப்பதாக 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது 15,000 டொலர் ஜாமீனில் வெளியே உள்ள தந்தை, டிசம்பர் 1ம் திகதி முதல் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார்.