சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலிய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரபல நாடு
சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான கோவிட் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
வரும் நவரம்பர் 8-ஆம் திகதி தம் முதல் அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத நுழைவை சிங்கப்பூர் அனுமதிக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 10 நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா சேர்க்கப்பட்டுள்ளது.
வணிக மையம் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், அதன் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க பயணத் தடைகளைத் தளர்த்தும் முடிவுக்கு வந்துள்ளது.
நவம்பர் 8-ஆம் தேதி முதல், சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், புறப்படுவதற்கு முன்பும், அவர்கள் வரும்போதும் கோவிட்-19 நெகட்டிவ் என்பதற்கான சோதனை முடிவுகளை வைத்திருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியும்.
அதேபோல், அவுஸ்திரேலிய அரசாங்கம் உடன்படிக்கைகளை ஒப்புதல் அளித்தால், சிங்கப்பூரில் இருந்து வணிகப் பயணிகள் மற்றும் மாணவர்கள் இந்த முயற்சியின் கீழ் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், குறிப்பிட்ட பயணப் பாதைகள் வழியாக தினசரி 4,000 பேர் வரை சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கும், இது தற்போதைய எண்ணிக்கையில் இருந்து 1,000 அதிகமாகவும்.
சிங்கப்பூரில் இன்னும் சில கட்டுப்பாடுகள் உள்ளன, ஆனால் இதுவரை கடுமையான ஊரடங்கு விதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம் அந்நாட்டில் 84 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.