வெளிநாட்டில் மிகப்பெரிய ஊழல் விசாரணையை எதிர்கொள்ளும் தமிழ் அமைச்சர்
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மீதான ஊழல் வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
35 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்
சிங்கப்பூரில் தூய்மையான நிர்வாகம் என பெருமைப்படுத்தி வந்த நிலையில், அரிதான ஊழல் விசாரணையை முன்னாள் அமைச்சர் ஒருவர் எதிர்கொள்கிறார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் தன் மீது 35 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். பொதுவாக சிங்கப்பூர் போன்ற செல்வம் மிகுந்த நாட்டில் ஊழல் மற்றும் முறைகேடு என்பது அரிதிலும் அரிதாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன், Ong Beng Seng என்ற தொழிலதிபரிடம் இருந்து ஆயிரக்கணக்கான டொலர் மதிப்பிலான உதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், Ong Beng Seng என்பவரின் தொழில் தொடர்பில் சாதகமாக நடந்துகொண்டுள்ளார். ஆனால் Ong Beng Seng மீது இதுவரை வழக்கு ஏதும் பதியவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் சிக்குவது 1986க்கு அடுத்து, தற்போது தான் என்றே கூறப்படுகிறது. 1986ல் தேசிய வளர்ச்சி அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
7 ஆண்டுகள் சிறை
ஆனால், விசாரணை முடிவுக்கு வரும் முன்னர் அந்த அமைச்சர் மரணமடைந்தார். 2006ல் அமைச்சராக பொறுப்பேற்ற ஈஸ்வரன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் 100,000 சிங்கப்பூர் டொலர் அபராதமாக செலுத்த நேரிடும் என்பதுடன், 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கும் விதிக்கப்படலாம்.
ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகளில், அவர் கால்பந்து போட்டிகளை காண சலுகை பெற்றதாகவும், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு நுழைவுச்சீட்டு வாங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே ஊழல் மற்றும் முறைகேடு அரிதாக நடக்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |