குழந்தைக்கு 17 வயது வரை ஆண்டுக்கு ரூ.1.51 லட்சம் ஊக்கத்தொகை - சிங்கப்பூர் அரசு அறிவிப்பு
singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சரிந்த பிறப்பு விகிதம்
பல்வேறு உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவு என்ற பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகள் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

தற்போது சிங்கப்பூர் அரசும் ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.
6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூர், குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 29,864 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 11.4% குறைவாகும். தற்போது பிறப்புகள் 10.8% குறைந்து 26,071 ஆக உள்ளது.
17 வயது வரை ஊக்கத்தொகை
சிங்கப்பூரின் வருடாந்திர தேசிய தினப் பேரணியின் போது இந்த நடவடிக்கைகளை அறிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங், "குழந்தை பிறப்பு முதல் 17 வயது வரை 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) வழங்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு 7 பில்லியன் சிங்கப்பூர் டொலர் அரசு செலவிடும் என அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 2,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.51 லட்சம்) குழந்தை உதவித்தொகை வழங்கப்படும்.
குடும்பங்களுக்கு 5,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3.7 லட்சம்) முதல் படி மானியமும் வழங்கப்படும்.
இதன் மொத்த பலன்களையும் சேர்க்கும் போது, 17 வயதில் 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) லட்சமாக இருக்கும்.
இந்த திட்டத்தின் மூலம், சுமார் 3,80,000 குடும்பங்களைச் சேர்ந்த 6,10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஆதரவு பெற்ற முழு நாள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் மாதக் கட்டணத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 150 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.11,306) ஆகக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இது தவிர, சிசு பராமரிப்புக் கட்டணம் மாதத்திற்கு 300 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.22,611) ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் அதிக குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு பராமரிப்பு விடுப்பும் வழங்கப்படும். 12 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோருக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்.
2 குழந்தைகள் இருந்தால் இந்த எண்ணிக்கை 10 நாட்களாகவும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் 12 நாட்களாகவும் உயரும்.
ஆனால் இந்த அறிவிப்பிற்கு முன்பு வெளியிடப்பட்ட YouGov கணக்கெடுப்பில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், எந்தவொரு அரசாங்கக் கொள்கையும் தங்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை அதிகரிக்காது என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |