உலகின் மிகவும் சுத்தமான நாடு: வெளிப்பட்டுள்ள இரகசியம்
சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான நாடாக இருப்பதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.
உலகின் மிக சுத்தமான நாடு
ஆசிய நாடான சிங்கப்பூர் 'உலகின் மிக சுத்தமான நாடு ' என்று கருதப்படுகிறது. இதற்கு காரணம் இங்குள்ள கடுமையான சட்ட திட்டங்கள் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, இங்கு Chewing gum விற்பனை செய்யக் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்பை 1965ஆம் ஆண்டில் மலேசியாவிடம் இருந்து பிரிந்த பிறகு சிங்கப்பூர் மேற்கொண்டது.
அப்போதைய பிரதமர் லீ குவான் யூ, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் மிகுந்து ஆர்வம் கொண்டிருந்த நாடாக சிங்கப்பூர் இருக்க விரும்பினார்.
தென் கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூரை தனித்துக்காட்ட, இதுபோன்ற அம்சங்கள் உதவும் என்று அவர் நம்பினார்.
தொழில்நுட்பம் பேருதவி
இந்நாட்டில் பொதுவெளிகளைத் தாண்டி சிறிய குடியிருப்புகள், பொதுக்கட்டிடங்கள் என பிற இடங்களும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன.

இதற்கு தொழில்நுட்பம் பேருதவியாக உள்ளது; குறிப்பாக ரோபோக்கள் குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது சிங்கப்பூர்வாசிகள் தங்கள் ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பங்களை சமூக ஊடங்களில் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.
அவற்றில் ஜன்னல்களை சுத்தம் செய்யும் ரோபோக்கள், குப்பை பையைத் தானாகவே மூடிவிடும் குப்பைத் தொட்டிகள் மற்றும் பழங்கள், காய்கறிகளை சுத்தம் செய்வதற்கான பிரத்யேக இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.
சிங்கப்பூருக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள், நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க உணர்வைக் கண்டு பெரிது வியக்க சுத்தம் மிக முக்கிய காரணமாக உள்ளது.
விமான நிலையங்களில் ரோபோக்கள்
இதற்கு மற்றொரு உதாரணமாக, விமான நிலையங்களில் சுத்தம் செய்யும் பணிகளையும் ரோபோக்கள் மேற்கொள்கின்றன.
இன்று, சிங்கப்பூரின் சுத்தம் பேணும் பண்பு அந்நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே திகழ்வதாகத் தோன்றுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு உணவுக்கூடத்தில், Food Haven என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'தன்னைத்தானே சுத்தம் செய்யும் மேசைகள்' கூட இப்போது இருப்பதாக சேனல் நியூஸ் ஆசியா செய்தி வெளியிட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |