2022-ன் செல்வாக்குமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர், ஜப்பான் முதலிடம்!
2022-ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க கடவுச்சீட்டு (Passport) பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சம்மேளனத்தின் தரவுகளைக்கொண்டு 2006-ஆம் ஆண்டு முதல் Henley & Partners நிறுவனம் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
காலாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் பாஸ்போர்ட் இன்டெக்ஸ், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேகத் தரவைப் பயன்படுத்தி தொகுக்கப்படுகிறது.
இதற்காக 199 வெவ்வேறு பாஸ்போர்ட்டுகள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த பட்டியலின்படி, சிங்கப்பூரும் ஜப்பானும் முதலிடம் பெற்றுள்ளன. இந்த இரு நாடுகளின் கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குச் செல்லமுடியும்.
இரண்டாம் இடத்தில் தென்கொரியாவும், ஜேர்மனியும் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 190 நாடுகளுக்குச் செல்லமுடியும்.
மூன்றாம் இடத்தில் இத்தாலி, பின்லந்து, லக்ஸம்பர்க், ஸ்பெயின் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 189 நாடுகளுக்குச் செல்லமுடியும்.
பிரித்தானியா, அமெரிக்கா, நியூஸிலந்து 6-ஆம் இடத்தில் உள்ளன. வுஸ்திரேலியா 7-வது இடத்தில் உள்ளது.
இலங்கையின் பாஸ்போர்ட் 102-ஆம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் 41 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும்.
மலேசியா 12-ஆம் இடத்திலும் இந்தியா 83-ஆம் இடத்திலும் உள்ளன. இந்தியக் கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 60 நாடுகளுக்குச் செல்லமுடியும்.
கடவுச்சீட்டு பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் கடைசியாக உள்ளது. அந்தக் கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு மட்டுமே செல்லமுடியும்.