பேருந்து இருக்கையில் கால் வைத்தால் 37000 அபராதம்: அமுலுக்கு வந்த புதிய விதிகள்
Singapore New Bus Rules Come Into Action: பேருந்தின் இருக்கை மீது கால் வைத்தால் ரூ.37 வரை அபராதம் விதிக்கும் புதிய விதிகள் சிங்கப்பூரில் அமுலுக்கு வந்துள்ளது.
சிங்கப்பூரில் அமுலுக்கு வந்த புதிய விதிகள்
சிங்கப்பூரில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது பயணிகள் இருக்கையின் மீது கால் வைத்தால் 500 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ 37000) வரை அபராதமாக செலுத்தும் புதிய விதிகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது.

அதைப்போல் பொது போக்குவரத்து பேருந்துக்குள் ஆடியோக்களை சத்தமாக ஒலிக்க செய்வது, பேருந்திற்குள் உணவு அருந்துவது, குப்பைகளை வீசுவது ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்களும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டி இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும், இனிமையான பொது போக்குவரத்து அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதை இந்த நடைமுறையானது நோக்கமாக கொண்டு இருப்பதாக அந்நாட்டு அரசு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வ குற்றம்
முன்பு இருந்தே எம்ஆர்டி ரயில்களில் உணவு உண்பவர்களுக்கு நீண்டகாலமாக அபராதமானது விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொது போக்குவரத்து பேருந்துகளில் இது போன்ற கட்டுப்பாடுகள் அந்தந்த பேருந்தின் உள்கட்டுப்பாடாகவே இருந்து வந்தது.

இதனால் பேருந்துக்குள் தேவையற்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்குமாறு மட்டுமே கூற முடிந்தது.
இந்நிலையில் மேல் குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நேரடியாக அபராதம் விதிக்க கூடிய சட்டப்பூர்வ குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.