சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி போட்ட 2 பேருக்கு Omicron உறுதி!
சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு பேருக்கு Omicron பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் Changi விமான நிலையத்தில் பணிபுரியும் 24 வயது முன்னணி பெண் ஊழியருக்கு Omicron வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஜேர்மனியில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 46 வயது பெண் பயணி ஒருவருக்கு Omicron வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கடந்த டிசம்பர் 6-ஆம் திகதி Vaccinated Travel Lane (10 நாள் தனிமைப்படுத்தல் விதிமுறைக்கு உட்படுத்தப்பாடாத) மூலமாக சிங்கப்பூருக்கு திரும்பியுள்ளார்.
இந்த இருவருமே கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது. அதில் ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இதுவரை இல்லை என MOH கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட 24 வயதான பெண் ஊழியர் டிரான்சிட் ஹோல்டிங் பகுதியில் பணிபுரிந்தார், அங்கு அவர் Omicron வகை வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளுடன் உரையாடியிருக்கலாம் என்று MOH கூறியது.
எல்லைப்புற முன்னணி ஊழியர்களுக்கான வாராந்திர பட்டியலிடப்பட்ட வழக்கமான சோதனையின் ஒரு பகுதியாக, டிசம்பர் 8-ஆம் திகதி அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவரது PCR சோதனை முடிவு Omicron வகை கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்ட தடயங்களை வெளிப்படுத்தியது என்று MOH தெரிவித்துள்ளது.
தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரும் குணமடைந்து வருகின்றனர். இரண்டு நிகழ்வுகளுக்கும் தொடர்புத் தடமறிதல் நடந்து வருகிறது.
மேலும் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் நியமிக்கப்பட்ட மையங்களில் 10 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.