சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய இந்தியர்களுக்கு கிடைத்துள்ள கௌரவம்
சிங்கப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றிய இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய பெண்
கடந்த சனிக்கிழமை மாலை, சிங்கப்பூரிலுள்ள Tanjong Katong சாலையில் திடீரென பெரும் சத்தத்துடன் ஒரு பள்ளம் உருவாகியுள்ளது.
தண்ணீர் நிரம்பிய அந்தப் பள்ளத்திற்குள் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு கார் விழுந்துள்ளது.
நடந்ததை கவனித்த சுப்பையா ( Pitchai Udaiyappan Subbiah, 46) என்னும் புலம்பெயர்ந்த இந்தியர், உடனடியாக அங்கு ஓடோடிச் சென்று, தன்னுடன் பணியாற்றிய சில பணியாளர்களுடன் இணைந்து அந்தக் காரிலிருந்த பெண்ணை மீட்டார்.
இந்தியர்களுக்கு கிடைத்துள்ள கௌரவம்
இந்நிலையில், அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய புலம்பெயர் இந்தியர்களை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள், ஆகத்து மாதம் 3ஆம் திகதி, ஜனாதிபதி மாளிகையில் சிங்கப்பூர் ஜனாதிபதியான தர்மன் ஷண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam) அவர்களை சந்திக்க இருக்கிறார்கள்.
பிச்சை உடையப்பன் சுப்பையா (47), மற்றும் அவரது சக பணியாளர்களான வேல்முருகன் முத்துசாமி (27), பூமாலை சரவணன் (28), கணேசன் வீரசேகர் (32), போஸ் அஜித்குமார் (26), நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25) மற்றும் சதாபிள்ளை ராஜேந்திரன் (56) ஆகிய ஏழு பேரும் ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |