ட்ரம்பின் ராணுவ நடவடிக்கை எங்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது: நாடொன்றின் மூத்த அமைச்சர்
வெனிசுலா மீதான ட்ரம்பின் ராணுவ நடவடிக்கை, சிறு நாடுகளுக்கு பெரும் கவலையை உருவாக்கியுள்ளதாக சிங்கப்பூர் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் ராணுவ நடவடிக்கை...
வெனிசுலாவில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடு, குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என சிங்கப்பூர் மூத்த அமைச்சரான லீ சியன் லூங் (Lee Hsien Loong) தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளது உண்மைதான் என்றாலும், அதில் இன்னொரு நாடு தன்னிச்சையாக தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் லீ தெரிவித்துள்ளார்.
உலகம் இப்படித்தான் இயங்குகிறது என்றால், ஒரு சிறிய நாடு என்னும் முறையில், அது பிரச்சினைக்குரிய விடயம்தான் என்றும் தெரிவித்துள்ளார் லீ.

என்றாலும், அமெரிக்கா வெனிசுலா நாடுகளில் எந்த நாட்டுக்கு ஆதரவு என்னும் விடயம் குறித்து கேள்வி எழுப்பியபோது, மிகவும் கவனமாக பதிலளித்தார் லீ.
இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அதில் நமக்கு என்ன பயன் என்று கூறிய லீ, சிங்கப்பூர் தனது கொள்கைகளில் உறுதியாக நிற்கும் என்றும், அது எந்த நாட்டின் செயலை ஏற்கவில்லையோ, அந்த நாட்டுக்கு சிங்கப்பூர் எதிரி என்று பொருளல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |