சிங்கப்பூர் பாடசாலையில் பயங்கர தீ விபத்து... காயங்களுடன் தப்பிய பவன் கல்யாணின் மகன்
சிங்கப்பூர் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் பலியாகியுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் உட்பட பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
பவன் கல்யாணின் மகன்
தொடர்புடைய தீ விபத்தில் இருந்து 23 முதல் 55 வயதுக்கு உட்பட்ட 6 பேர்களும், 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட 16 சிறார்களும் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் 7 வயது மகனும் ஒருவர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த 10 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சதி திட்டம் எதுவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆதாரமில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள சில சிறார்கள் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர் காயங்களுடன் தப்பியதாகவே ஜன சேனா கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், புகையை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
30 நிமிடங்களுக்குள்
இதனிடையே, ஒப்புக்கொண்ட தனது முந்தைய பணிகளை முடித்த பிறகு பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்வார் என்றே அவரது கட்சி சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பகல் 9.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் வெளியான 30 நிமிடங்களுக்குள் மூன்று தண்ணீர் ஜெட்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்து நடந்த வளாகம் மற்றும் அருகிலுள்ள வளாகத்திலும் இருந்த சுமார் 80 பேர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |