சிங்கப்பூர் முதலாளிக்கு எதிராக வழக்கு: 1 லட்சம் டொலர் நஷ்டஈடு வாங்கிய தமிழர்! பின்னணி காரணம்
சிங்கப்பூரில் முதலாளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தமிழர் ஒருவ சுமார் $73,500 நஷ்டஈடு வாங்கியுள்ளார்.
வழக்கு தொடர்ந்த தமிழர்
சிங்கப்பூரில் கப்பல் பழுது பார்க்கும் நிறுவனமான ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தில் கட்டமைப்பு எஃகு மற்றும் கப்பல் பணியாளராக இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ராமலிங்கம் முருகன் என்பவர் முதலாளிகளின் அலட்சியத்தை காரணம் காட்டி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி சுமார் 24 பேருடன் லொறியில் சென்று கொண்டு இருந்த போது மழையிலிருந்து தப்பு லொறிக்குள் தஞ்சமடைவதற்காக மற்றொரு தொழிலாளி ஒருவர் தன்னை லொறியில் இருந்து தள்ளினார்.
Reuters
இதனால் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது, மேலும் அதற்காக எலும்பு முறிவு சிகிச்சை செய்து 5 மாதங்கள் விடுப்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை தனது நிறுவனமோ அல்லது முதலாளிகளோ செய்ய தவறியதே இதற்கு காரணம் என வழக்கில் சுட்டிக் காட்டி இருந்தார்.
$73,500 நஷ்டஈடு
இந்த வழக்கு தொடர்பாக ராமலிங்கம் முருகன் முன்வைத்த குற்றச்சாட்டிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மறுப்பு தெரிவித்ததுடன், அவர் லொறியில் இருந்து கீழே இறங்கும் போதே தவறி விழுந்துள்ளார் என கூறியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி டான் மே டீ, தொழிலாளி முருகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி $73,500(1,00,000 சிங்கப்பூர் டொலர்) நஷ்ட வழங்க உத்தரவிட்டார்.
அத்துடன் நிறுவனத்தின் தெளிவான கடமை மீறல் நடந்து இருப்பதாகவும், சில ஒழுங்கு நடவடிக்கை மற்றும் முறையான மேற்பார்வைகளை நிறுவனம் கடைபிடிக்காமல் இருப்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |