2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்
Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.
சிங்கப்பூர் முதலிடம்
சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.
IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன.
தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
அமெரிக்கா
அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |