இந்த இரு நகரங்களில் தான் உலகிலேயே விலைவாசி மிக மிக அதிகம்: வெளியான புதிய தரவுகள்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நகரங்களும் உலகிலே மிக மிக அதிக விலைவாசி கொண்ட நகரங்கள் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி
இந்த வரிசையில் ஜெனீவா, நியூயார்க் மற்றும் ஹொங்ஹொங் நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், உலகளாவிய வாழ்க்கைச் செலவு நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@reuters
சூரிச் மற்றும் சிங்கப்பூரில் மக்கள் பரவலாக பயன்படுத்தப்படும் 200 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் சாதனை உயர்வாக 8.1 சதவீதம் என 2022ல் பதிவாகியிருந்தது. விலைவாசி லேசாக சரிவடைந்திருந்தாலும், 2017 மற்றும் 2021 காலகட்டத்தை ஒப்புடுகையில் மிக மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.
உலகின் மிக உயர்ந்த
சிங்கப்பூர் கடந்த பதினொரு ஆண்டுகளில், பல வகைகளில் அதிக விலை நிலைகள் காரணமாக தரவரிசையில் ஒன்பதாவது முறையாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.
@reuters
சிங்கப்பூரில் தான் உலகின் மிக உயர்ந்த போக்குவரத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மட்டுமின்றி, ஆடைகள், மளிகை பொருட்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றிற்கு விலை மிக மிக அதிகம்.
ஆனால் சுவிஸ் பிராங்கின் மதிப்பு சூரிச் நகர விலைவாசி உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மளிகைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான கட்டணங்கள் இங்கு மிக மிக அதிகம்.
ஜெனீவா மற்றும் நியூயார்க் நகரங்கள் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹொங்ஹொங் 5வது இடத்திலும், ஆறாவது இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |