மேடையில் பிரபல பாடகி செய்த முகம் சுழிக்க வைத்த செயல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
மேடை கச்சேரியில் பாடகி ஒருவர் ரசிகர் மீது சிறுநீர் கழித்த செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Florida நகரில் 'Brass Against' என்ற இசைக் குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் குழுவின் பிரபல பாடகியான சோபியா உரிஸ்டா மேடையில் பாட்டு பாடி கொண்டிருந்தார்.
ரசிகர்களும் சோபியாவின் பாடல்களை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு கட்டத்தில் உற்சாகம் அதிகரித்த நிலையில் மேடையின் முன்புறம் இருந்த ஒரு ரசிகரை சோபியா அழைத்து மேடையில் படுக்குமாறு கூறினார்.
அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சோபியா அந்த இளைஞரின் மீது சீறுநீர் கழித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு சோசியல் மீடியாவில் தீயாய் பரவி பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
— sophia urista (@sophiaurista) November 16, 2021
இப்படியா பொது மேடையில் அநாகரீகமாக நடந்த கொள்வது என்று பலரும் விமர்சித்துள்ளனர். ஆனால் அந்த ரசிகர்தான் பாடகியிடம் அப்படி செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த இசைக் குழு மற்றும் பாடகி சோபியாவும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் டிவிட்டரில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளனர்.