விரைவில் மூன்றாவது திருமணம்! காதலரோடு நிச்சயதார்த்தம் முடித்த பிரபல பாப் பாடகி.. வெளியான புகைப்படங்கள்
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கும் அவரது நீண்ட நாள் நண்பரான சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இவரது குரலுக்கு அடிமை. அவர் தான் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு எக்கசக்க ரசிகர் கூட்டங்கள் இணையத்தில் குவிந்து உள்ளது.
இவர் கடந்த 2004ஆம் ஆண்டு அவரது நண்பரான ஆலன் அலெக்சாண்டர் என்பவரை மணந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் கெவின் பெடர்லைன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். இதன் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். ஆனால் கல்யாணம் ஆன மூன்றே ஆண்டுகளில் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் நீண்ட நாள் நண்பரான சாம் அஸ்காரி என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கிடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இருவரும் கையில் மோதிரம் மாற்றி கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. பிரிட்னி ஸ்பியர்சின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.