நடிகர் ஜீவா பேசிய கருத்துக்கு பாடகி சின்மயி கண்டனம்
செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசிய கருத்து தொடர்பாக பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜீவா பேசியது
தமிழக மாவட்டமான தேனியில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், கேரளா சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வன்புணர்வு விவகாரம் தொடர்பாகவும், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "இது உண்மையிலேயே மிகவும் தவறானது. அனைத்து துறைகளிலும் இது போன்ற விடயங்கள் நடக்கின்றன. முன்பு 'மீ டூ' (Me Too) மூலம் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சினைகளை கூறினார்கள்.
தற்போது மீண்டும் அதே போல நடக்கிறது. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.
ஆனால், செய்தியாளர்கள் மீண்டும் அவரிடம் அதே கேள்வியை கேட்டதால், ஏற்கனவே இந்த கேள்விக்கு பதிலளித்து விட்டேன் என்று கோபமாக கூறினார். பின்னர், கேரள சினிமாவில் தான் இந்த சம்பவங்கள் நடக்கிறது. தமிழ் சினிமாவில் இது போல பிரச்சனை கிடையாது என்று கூறினார்.
சின்மயி மறுப்பு
இந்நிலையில், நடிகர் ஜீவா பேசிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "எப்படி நீங்கள் தமிழ் திரையுலகத்துறையில் வன்புணர்வு சீண்டல்கள் இல்லை என்று கூற முடியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |