பின்னணி பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு - மலையேற்றத்தின் போது நேர்ந்த சோகம்
பின்னணி பாடகி சித்ரா ஐயரின் சகோதரி மலையேற்றத்தின் போது உயிரிழந்துள்ளர்.
சித்ரா ஐயரின் தங்கை உயிரிழப்பு
கேரளாவை சேர்ந்த 52 வயதான சாரதா ஐயர், ஓமனில் வசித்து வருகிறார். இவர் பல்வேறு பிரபல தமிழ் மற்றும் மலையாள பாடல்களில் பின்னணி பாடகியாக பணியாற்றிய சித்ரா ஐயரின் சகோதரி ஆவார்.

கடந்த ஜனவரி 2 ஆம் திகதி, ஓமனின் ஜெபல் ஷம்ஸ் பகுதியில் உள்ள கரடுமுரடான, குறுகலான பாதைகளை உடைய வாடி குல் பகுதியில், ஒரு குழுவுடன் மலையேற்றம் மேற்கொண்டார்.
இந்த மலையேற்றத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாரதா ஐயர் உயிரிழந்துள்ளார், அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
சாரதாவின் உடல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், வரும் ஜனவரி 7 ஆம் திகதி, கேரளாவின் தாழவாவில் உள்ள குடும்பத்தின் மூதாதையர் வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி அவரது தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான ஆர்.டி.ஐயரின் மறைவுக்காக கேரளா வந்த சாரதா ஐயர், டிசம்பர் 24ம் திகதி மீண்டும் ஓமன் திரும்பியுள்ளார்.
சகோதரியின் மறைவிற்கு சித்ரா ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |