இளவரசர் பிலிப் மரணத்தை கேலி செய்யும் வகையில் டயானாவுடன் இணைத்து ட்வீட் வெளியிட்ட இளம்பெண்: கொந்தளிக்கும் மக்கள்
நாட்டில் என்ன நடந்தாலும், வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஒரு செல்பி எடுத்து எதையாவது எழுதி ஒரு ட்வீட் போடுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்.
சமூக ஊடக பிரபலங்கள் என பெயர் பெற்ற அவர்களைப் பொருத்தவரை மக்கள் தங்களை கவனிக்கவேண்டும் என்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானிய பாடகியான Lily Allen. மேடையிலேயே பிறப்புறுப்பு தெரியும் வகையில் உடையணிந்துவிட்டு, அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், அதையே பிரபலமாவதற்காக பயன்படுத்திய ஒரு பெண் அவர்.
அவர் தற்போது பிரித்தானிய மகாராணியாரின் கணவர் பிலிப் குறித்து வெளியிட்ட ஒரு ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குழந்தை வீட்டுக்குள் நுழைய முயல்வதுபோலவும், அதை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்து ஒரு பெண் கதவை மூடுவது போலவும், அந்த குழந்தை கதறி அழுவதுபோலவும் ஒரு மீம் ஒன்றை வெளியிட்டு, இளவரசர் பிலிப் சொர்க்கத்துக்குள் நுழையும்போது இளவரசி டயானா இப்படித்தான் செய்வார் என்றும் கமெண்ட் செய்துள்ளார் ஒருவர்.
அதேபோன்ற ஒரு கருத்தை வெளியிட்டு, விழுந்து விழுந்து கண்ணீர் வரும்வரை சிரிப்பது போல ஒரு இமோஜியை வெளியிட்டுள்ளார் பாப் பாடகி Lily Allen.
இந்த ட்வீட் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
Princess Diana when Philip tries to enter heaven pic.twitter.com/UPQDHZNmd2
— Saint Hoax (@SaintHoax) April 9, 2021
ஒருவர் இறந்துள்ளார், அவரது குடும்பம் கண்ணீரில் தவிக்கிறது, இப்படிப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு ட்வீட் தேவையா? இது காமெடியா என ஒருவர் கேட்க, அதைப்பற்றி கவலையே படாமல், ஓ! இளவரசர் பிலிப் இறந்துவிட்டார் என மீண்டும் அந்த பெண் நக்கல் செய்துள்ளார்.
அதைக் கண்ட மற்றொருவர், உன்னுடைய பாடகி தொழில் இனி அவ்வளவுதான் என ட்வீட் செய்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் அவரை கண்டிக்கும் வகையில் ட்வீட்களை வெளியிட, கொஞ்சமும் அசராமல், பிரித்தானிய அரசாங்கத்தை அவமதிக்கும் வகையிலும் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் Lily Allen.
oh, Prince Phillip has died.
— LILYALLEN2.0 (@lilyallen) April 9, 2021
honestly this government isn’t even worth my time.
— LILYALLEN2.0 (@lilyallen) April 9, 2021