கல்லூரி சென்று வர தினமும் ரூ.18,000 செலவழித்து 2,000 கிமீ பயணிக்கும் பாடகி
பெரும்பாலானோர் தினமும் கல்லூரிக்கு சென்று வர, பேருந்து மூலம் சில மணி நேரங்கள் பயணம் செய்வார்கள்.
கல்லூரி வீட்டில் இருந்து வெகு தூரத்தில் இருந்தால், கல்லூரி விடுதியில் தங்கி படிப்பார்கள்.
பாப் பாடகி
ஆனால் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரி படிப்பிற்காக தினமும் 2,000 கிமீ பயணம் செய்து வருகிறார்.
22 வயதான பாப் பாடகியும், பிரபல ஜப்பானியப் பெண் குழுவான Sakurazaka46-ன் உறுப்பினருமான யூசிகி நகாஷிமா(Yuzuki Nakashima), ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருகிறார்.
இவர் சிறு வயதிலேயே, தனது கல்லூரி படிப்பை புகுவோகாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ளார்.
ஆனால் புகுவோகா பல்கலைக்கழகம் அவரது வீட்டில் இருந்து 1,000 கிமீ தொலைவில் உள்ளது. இருந்தாலும் தனது வீட்டில் இருந்து தினமும் 1,000 கிமீ பயணித்து கல்லூரிக்கு சென்று வருகிறார்.
அதிகாலை 5 மணிக்கு ஒப்பனை செய்ய தொடங்கும் யூசிகி, ஹனேடா விமான நிலையத்திற்கு சென்று காலை 6 மணிக்கு கிடாக்யுஷு செல்லும் விமானத்தில் பயணத்தை தொடங்குகிறார்.
காலை 9:30 மணிக்கு விமானத்தில் வந்து இறங்கும் அவர், டாக்ஸி அல்லது பேருந்து மூலம், ஃபுகுயோகா வளாகத்திற்கு சென்றடைகிறார். இந்த பயண நேரத்தை வீட்டுப்பாடம் மற்றும் படிப்பதற்கு பயன்படுத்துகிறார்.
தினமும் ரூ.18,000 செலவு
அதன் பிறகு மாலை கல்லூரி முடிந்த பின்னர், மீண்டும் 1,000 கிமீ பயணம் செய்து டோக்கியோவில் உள்ள தனது வீட்டை அடைகிறார். ஒரு நாளைக்கு கல்லூரி சென்று வர 210 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.18,000) செலவிடுகிறார்.
தனது கல்லூரி படிப்பை முடிக்கும் வரை, 4 வருடங்களாக இவ்வாறு பயணம் செய்துள்ளார்.
பாடகியாக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற, பகுதிநேர வேலை செய்து வந்த அவர், தற்போது தற்போது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
கல்லூரி வாழ்க்கையை ரகசியமாக வைத்திருந்த அவர், பட்டம் பெற்றதை வாழ்க்கையின் முக்கிய மைல் கல்லாகக் கருதி பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். இது தொடர்பாக, அவர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அது எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், தைரியமாக அதை அடைய முயற்சி செய்யுங்கள். உங்கள் கனவைத் துரத்த நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கையின் மிகவும் மதிப்புமிக்க நினைவுகளில் ஒன்றாக மாறும்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |