ஒற்றை மெழுகுவர்த்தியால் தீக்கிரையான கோவில்: வைரலாகும் வீடியோ!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை மெழுகுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்து
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பிரபலமான வென்சாங் பெவிலியன் என்ற மலைக் கோவிலில் இந்த மாதம் 12ம் திகதி ஏற்பட்ட பெரும் தீ விபத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பக்தர் ஒருவரின் அலட்சியத்தால் வென்சாங் பெவிலியன் கோவில் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.
அதாவது, கோவிலில் பிராத்தனைக்காக பக்தர் ஒருவர் ஏற்றிய மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விட்டதை அடுத்து இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
பிராத்தனையின் போது மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தியை வைக்காமல், பக்தர் தள்ளி வைத்ததால் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
Smh ...
— Xavia Jackson (@Xavia_Jackson) November 20, 2025
A tourist has been blamed for burning down a sacred Chinese temple through their improper use of incense and candles. The fire broke out at Wenchang Pavilion on Fenghuang Mountain in Zhangjiagang, Jiangsu province, on November 12. Dramatic footage showed the three-story… pic.twitter.com/XkPMrT6ZHh
இந்த தீ விபத்தில் கோவிலில் 3 தளங்களும் முற்றிலுமாக தீக்கிரையானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் தீ விபத்து தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு புனரமைப்பு பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |