ரஷ்யாவில் பயங்கரம்! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: வெளியான வீடியோ
ரஷ்யாவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Khabarovsk நகரில் உள்ள Kalinka விமானநிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
Kalinka விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சில நொடிகளில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் இரண்டு பயணித்ததாகவும், ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.