உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்று ஒமிக்ரானுக்கு எதிராக பயனற்றது என ஆய்வில் கண்டுபிடிப்பு!
உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிளில் ஒன்றான சினோவேக் உருவாக்கிய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக பயனற்றது என முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
ஹாங்காங் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த ஆய்வு, நுண்ணுயிரியலாளர்களான Yuen Kwok-yung, Kelvin To மற்றும் Chen Honglin ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், சினோவேக் தயாரித்த ‘கொரோனாவாக்’ தடுப்பூசியின் 2 டோஸ் போட்டு 25 பேரில், ஒருவருக்கு கூட ஒமிக்ரான் எதிராக போராட போதுமான ஆன்டிபாடிகள் உருவாகவில்லை என்று கண்டறியப்பட்டது.
ஜேர்மனியின் BioNTech உருவாக்கிய Pfizer தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்ட 25 பேரில் ஐந்து பேருக்கு போதுமான ஆன்டிபாடிகள் உருவானதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3வது அல்லது பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 90% க்கும் அதிகமானோர் ஒமிக்ரானை அழிக்க முடிந்தது என்பதைக் காட்டுகிறது.
இதனால், மக்கள் முடிந்தவரை விரைவாக 3வது அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளுமாறு ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, உக்ரைன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 47 நாடுகளில் சினோவேக் தயாரித்த ‘கொரோனாவாக்’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் குறிப்பாக சீனா மற்றும் வளரும் நாடுகளில் சினோவேக் தயாரித்த ‘கொரோனாவாக்’ தடுப்பூசி போட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு முடிவு கவலையை ஏற்படுத்தியுள்ளது.