கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் கடைசி ஆணை: வெளியான நடுங்கவைக்கும் தகவல்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படுவதற்கு முன்னர், தமது படைகளுக்கு நடுங்கவைக்கும் கட்டளை ஒன்றை இட்டுச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஞ்சிய பணயக்கைதிகளை
தாம் கொல்லப்பட்டாலும், ஹமாஸ் படைகள் சமரசங்களுக்கு பணியாமல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டும் என சின்வார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், இஸ்ரேல் ராணுவத்தால் தாம் படுகொலை செய்யப்பட்டால், எஞ்சிய பணயக்கைதிகளை படுகொலை செய்யவும் சின்வார் கட்டளையிட்டுருக்கலாம் என நிபுணர்கள் தரப்பு அஞ்சுகின்றனர்.
இஸ்ரேல் எல்லையில் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகளால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இஸ்ரேலிய மக்கள் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், 250 பேர்கள் ஹமாஸ் படைகளால் பணயக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்து வரப்பட்டனர். சுமார் 20 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் சித்திரவதை அனுபவித்த யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ராணுவத்தின் கொலைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
பணயக்கைதிகள் தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்தாலும், போர்நிறுத்தம் தொடர்பில் ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஹமாஸ் தலைவர்களே இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் பயங்கரமாக இருக்கலாம்
இந்த நிலையில், தாம் கொல்லப்பட்டாலும், போர் முன்னெடுக்கப்பட வேண்டும் என சின்வார் ஹமாஸ் படைகளுக்கு கட்டளையிட்டிருக்கலாம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸ் அரசியல் தலைவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது எந்த சலுகைகளையும் அனுமதிக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையிலேயே, ஹமாஸ் படைகள் சரணடைய முன்வர வேண்டும் என்றும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சின்வாரின் உறுதியான உத்தரவு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் மீது ஹமாஸ் படைகள் கொரில்லா போரை முன்னெடுக்கும் வாய்ப்பும் இருப்பதாக நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சின்வாரின் படுகொலைக்கு பின்னர் ஹமாஸ் படைகளின் நடவடிக்கைகள் இன்னும் பயங்கரமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |