வரலாற்றில் முதல்முறையாக ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த சியோமி!
வரலாற்றில் முதல்முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்திருக்கின்றது சியோமி நிறுவனம்.
ஜூன் மாதத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாகவும் சியோமி மாதாந்திர அடிப்படையில் 26 சதவீதம் ஜூன் மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது.
சியோமி நிறுவனத்தின் இவ்வளர்ச்சி குறித்து தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வு பிரிவு இயக்குனர் தருன் பதாக் "சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்திக்க துவங்கியது முதல் சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க சியோமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஹூவாய் மற்றும் ஹானர் பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற சந்தைகளில் சியோமி கூடுதல் கவனம் செலுத்த துவங்கியது." என தெரிவித்தார்.
மேலும் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் சியோமி இதுவரை சுமார் 80 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது எனதகவல்கள் தனியார் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.