கேரளாவில் SIR பணிச்சுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட ஊழியர்! ராஜஸ்தானிலும் ஒருவர் உயிரிழப்பு
இந்திய மாநிலம் கேரளாவில் SIR பணியில் ஈடுபட்டு வந்த பாடசாலை ஊழியர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SIR பணியில் அழுத்தம்
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் அனீஷ் ஜார்ஜ் (44) என்ற நபர், வாக்குச்சாவடி நிலை அலுவலராக SIR பணியில் ஈடுபட்டு வந்தார். 
இந்த நிலையில் இவர் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளின் மன அழுத்தம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அனீஷ் ஜார்ஜ் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், தாமதமாக வேலை செய்தல் மற்றும் பணிகளை முடிக்க அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொண்டதாகவும் அவரது குடும்பத்தினரும், சக ஊழியர்களும் கூறியுள்ளனர்.
ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை கோரியுள்ளார். மேலும் விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரிலும் ஒருவர்
அத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) கூட்டாக வேலை செய்வதாகவும், பணி அழுத்தம் குறித்த முறையான புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் கூறினார்.
அதேபோல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலும், BLO ஆக பணியாற்றி வந்த முகேஷ் குமார் (36) என்கிற அரசு ஆசிரியரும் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அவரது சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |