சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விபரீத முடிவு- என்ன காரணம்?
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
நடிகை ராஜேஸ்வரி
சென்னையை சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

இவருக்கு சதீஸ் என்பவருடன் 24 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஹேமந்த் என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
உயிரிழப்பு
கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி, நேற்று இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காக கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினர்.
அவரின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |